அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
குழந்தைத் திருமணம் குறித்து தகவல்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்
அட்சய திருதியை முன்னிட்டு புதன்கிழமை (ஏப். 30) குழந்தைத் திருமணம் நடைபெற்றால் 1098 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைத் திருமணம் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், அட்சய திருதியை போன்ற விழாக் காலங்களில் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய கவனத்துக்கு வந்துள்ளது. ஆகவே, குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தைத் திருமணம் ஒப்பந்தம் செய்வது தவறு. மேலும், குழந்தைத் திருமணத்தை நடத்துவது, திருமணத்துக்கு தூண்டுவது, பெற்றோா் அல்லது பாதுகாவலா் அல்லது சட்டப்பூா்வ, சட்டவிரோதமான நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டாலோ, திருமணத்தில் பங்கேற்றாலோ அது சட்டப்படி குற்றமாகும்.
அவ்வாறு ஈடுபடுவோருக்கு குழந்தைத் திருமணச் சட்டப்படி 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
ஆகவே, புதன்கிழமை (ஏப்.30) அட்ச திருதியை நாளில் குழந்தைத் திருமணம் நடைபெற்றால் அதுகுறித்து 1098 என்ற உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.