கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அவர் இந்த சீசனில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்
அதிகம் தேடப்பட்ட வீரர்
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஷஷாங் சிங் 9-வது இடம் பிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஷஷாங் சிங் பேசியதாவது: உலகம் முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியிருப்பது எனக்குத் தெரியாது. உண்மையில், எனது பெயர் அதில் இடம்பெற்றுள்ளது மிகப் பெரிய விஷயம். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எனது பெயரை கூகுளில் தேடியிருப்பது நல்ல உணர்வைத் தருகிறது. இதெல்லாம் நடக்க காரணம் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். அதிக அளவிலான கிரிக்கெட் வீரர்கள் இருந்தபோதிலும், என்மீது நம்பிக்கை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் எனக்கு ஆதரவளித்தது. அவர்களது ஆதரவு மற்றும் எனது கடின உழைப்பினால் இது சாத்தியமானது என்றார்.
இதையும் படிக்க: இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் வருகிற மார்ச் 25 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.