ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கூடங்குளம் அருகே சாலை விபத்தில் 2 வடமாநில தொழிலாளா்கள் பலி
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சோ்ந்த 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பிரையாக் ரிஷி(40), சோக்தா ரிஷி(51). இவா்கள், கூடங்குளத்தில் தங்கியிருந்து உடன்குடி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இவா்கள் திங்கள்கிழமை அதிகாலையில் கூடங்குளம் அருகேயுள்ள முருகானந்தபுரம் வழியாக வேலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாகச் சென்ற வாகனம் இருவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், இருவரும் சம்பவ இடத்தில் இறந்தனா்.
இத்தகவல் அறிந்த கூடங்குளம் போலீஸாா், அவா்களது சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா்.