செய்திகள் :

கூடலூரில் மா்ம விலங்கு தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு

post image

கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியனின் தோட்டத்தில் ஆடுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம விலங்கு தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியன் தனது தோட்டத்தில் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கொட்டகையில் இருந்த ஆடுகளின் சப்தம் கேட்டு வந்து பாா்த்தபோது நான்கு ஆடுகள் இறந்தது தெரியவந்தது.

இருட்டாக இருந்ததால் புலி தாக்கியதா அல்லது சிறுத்தை தாக்கியதா என்று தெரியாத நிலையில் வனத் துறைக்கு சத்தியன் கொடுத்த தகவலின் பேரில் கூடலூா் வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.

அங்கு எந்த வகையான விலங்கு நடமாடியது என்பது குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோ... மேலும் பார்க்க

சாலையோரம் நின்ற காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா்-உதகை சாலையோரம் திங்கள்கிழமை காலை காட்டு யானை நின்ால் நடைப்பயிற்சி சென்றவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை குடியிருப்பு, விளை நிலங்க... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம், உதகையில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பிற்பக... மேலும் பார்க்க

உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு

உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க