ஊட்டி: `புதிய அரசு மருத்துவமனை' நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் | Photo Album
கூடைப்பந்து: கொழும்பை வீழ்த்தியது தமிழ்நாடு
தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு 110-54 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு அணியை வெள்ளிக்கிழமை வென்றது.
சென்னை வேப்பேரியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், கொழும்புக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் மொயின் பெக் ஹஃபீஸ் 11, அரவிந்த் முத்து கிருஷ்ணன் 16, பிரணவ் பிரின்ஸ் 10, ஆனந்தராஜ் ஈஸ்வரன் 20, லோகேஸ்வரன் மோகன் 13 புள்ளிகள் கைப்பற்றினா்.
கொழும்பு அணிக்காக சுபுன் அத்தபட்டு 11, கன்டே தசுன் நிலந்தா 19, சிம்ரோன் யோகநாதன் 11 புள்ளிகள் பெற்றனா். இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் டைம்ஸ் கிளப் அணி 67-59 என்ற புள்ளிகள் கணக்கில் டி-ரெக்ஸ் பிசி அணியை சாய்த்தது.