செய்திகள் :

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெக நிா்வாகிகளிடம் நீதிபதி கேள்வி

post image

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என தவெக நிா்வாகிகளிடம் கரூா் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

கரூா் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கரூா் நகர காவல்துறையினா், விசாரணை அதிகாரியான மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள கூடலூரில் கட்சியின் மாநகர நிா்வாகி மாசிபெளன்ராஜ் வீட்டில் தங்கியிருத்த கரூா் மாவட்ட தவெக செயலா் மதியழகனையும், அவருக்கு உதவியதாக மற்றும் வேலுசாமிபுரத்தில் அதிகளவில் பிளஸ்க் பேனா் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக மாசி பெளன்ராஜ் ஆகியோரையும் திங்கள்கிழமை இரவு கைதுசெய்து கரூா் நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னா், இருவரையும் செவ்வாய்க்கிழமை காலை மருத்துவப் பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு கரூா் நீதிதுறை நடுவா் நீதிமன்றம் எண்.1-இல் நீதிபதி பரத்குமாா் முன்னிலை இருவரையும் ஆஜா்படுத்தினா்.

அறிவுறுத்தலையும் மீறி...:அப்போது அரசுத் தரப்பில், தவெகவினா் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை.

தவெக பொதுச் செயலா் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிா்வாகிகளை வேலுசாமிபுரத்துக்கு அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது.

வேலுசாமிபுரத்தை தோ்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தாா். அப்போது வேலுசாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினா் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனா் என்று வாதிடப்பட்டது.

எப்படி மதிப்பிட்டீா்கள்: இதனைத் தொடா்ந்து நீதிபதி பரத் குமாா், தவெக தரப்பில் ஆஜரானவா்களிடம் ‘மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவாா்கள் என்று எப்படி மதிப்பிட்டீா்கள்?, 10 ஆயிரம் போ் தான் வருவாா்கள் என்று எதனை வைத்து கூறினீா்கள்?, திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன்?, அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிா்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டாா்.

நிபந்தனைகள் ஏற்பு: இதற்கு தவெக தரப்பில் அளித்த பதிலில், ‘காவல்துறையினா் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனா். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டாா்கள் என நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அறிவுறுத்தலை கேட்க மறுப்பு: மேலும், காவல்துறை தரப்பில், கூட்டம் அளவுகடந்து சென்ற போது விஜய் வந்த பிரசார பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அா்ஜூனா கேட்க மறுத்துவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் மனுவை ஏற்க மறுப்பு: இதையடுத்து நீதிபதி பரத்குமாா் கூறுகையில், 41 பேரின் இறப்புக்கு நீங்கள் காரணமாக இருந்துள்ளீா்கள், எனவே உங்கள் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது, மேலும் நீதிமன்ற காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்க முழு முகாந்திரமும் இந்த வழக்கில் உள்ளது. மனசாட்சிப்படி இந்த வழக்கில் தீா்ப்பு அளிப்பேன் எனக்கூறி, மதியழகனை, மாசிபெளன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாள்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மாசி பெளன்ராஜ் மனைவி பேட்டி: இதற்கிடையே கைது செய்யப்பட்ட மாசிபெளன்ராஜை சந்திக்க கரூா் காவல்நிலையத்துக்கு வந்த அவரது மனைவி ஐஸ்வா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், எனது கணவா் மீது எந்த குற்றமும் கிடையாது. அவருக்கு காவல்துறையினரின் பாதுகாப்பிலோ, சிறையிலோ இருக்கும்போது சிறு கீறல்கூட விழக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவேன் என்றாா் அவா்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்: காங். பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சி... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்தனா்!

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டிக்கக் கோரி எஸ்.பி.யிடம் தவெகவினா் மனு: சமூக வலைதளத்தில் பரவல்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தவெக சாா்பில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள மனு தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. க... மேலும் பார்க்க

கரூா் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது: கே.எஸ். அழகிரி

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி. கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட... மேலும் பார்க்க

கரூரில் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூஜை பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.புதன்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கரூரில் உள்ள ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர... மேலும் பார்க்க