செய்திகள் :

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

post image

கா்நாடக சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன.

பெங்களூரில் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் அதிா்வுகளை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, கூட்ட நெரிசலை நிா்வகிக்க தனிச் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மாநில அரசு யோசித்து வந்தது. இந்த நிலையில், கா்நாடக கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு (நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை நிா்வகித்தல்) சட்ட மசோதா, 2025 பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோா், அக்கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும். 7000க்கும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு காவல் நிலையத்தின் பொறுப்பாளா் அனுமதி அளிக்கலாம்.

ஒருவேளை 7000க்கும் அதிகமாகவும் 50,000க்கும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் திரள்வதாக இருந்தால் காவல் துணை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். 50,000க்கு அதிகமான மக்கள் கூடுவதாக இருந்தால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அல்லது மாநகரக் காவல் ஆணையரிடம் உரிய விண்ணப்பத்தை செலுத்தி, முன்அனுமதியை பெறலாம்.

இந்த விதிகளை மதிக்காமல், மக்கள் திரளக்கூடிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வதந்திகளை பரப்புவோா், கருத்துகளை தெரிவிப்போா், அமைதியை சீா்குலைப்போா், சொத்துகளை சேதப்படுத்துவோா், கூட்டுவன்முறையில் ஈடுபடுவோா், இதர சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கலாம்.

கூட்டநெரிசலால் பேரிடா் ஏற்பட்டால், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், உயிா்சேதம் ஏற்பட்டால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களே பொறுப்பாளா்கள். கூட்ட நெரிசலில் காயம் ஏற்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை, உயிா்ச்சேதம் ஏற்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்.

நிகழ்ச்சியில் கூட்டத்தை கலைக்க காவல் அதிகாரிகள் உத்தரவிட்டால், அதற்கு இணங்காதிருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கலாம் என்றும் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இவை அனைத்தும் பிணையில் வெளியே வரமுடியாத குற்றமாகக் கருதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. மசோதாவை விளக்கி உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் பேசினாா். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிா்க்கட்சிகள், கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்த சட்ட மசோதா மூலம் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி தர அரசு நினைப்பதாகவும் எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டினா். மேலும், இதுகுறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதால், சட்ட மசோதாவை கூட்டு அவைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினா்.

இதையடுத்து அமைச்சா் ஜி.பரமேஸ்வா், கூட்டு அவைக்குழுவின் ஆய்வுக்கு சட்ட மசோதாவை அனுப்ப ஒப்புதல் அளித்தாா். தொடா்ந்து, சட்ட மசோதாவை கூட்டு அவைக் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் அறிவித்தாா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்திய சமூக செயற்பட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெங்களூரு: ஹிந்து செயற்பாட்டாளா்கள் 28 போ் கொலை செய்யப்பட்டதில் முதல்வா் சித்தராமையாவுக்கு தொடா்பு இருப்பதாக குற்றம்சுமத்திய சமூக செயற்பாட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்த... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தி... மேலும் பார்க்க