செய்திகள் :

கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!

post image

தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.

இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

கூா்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனா். சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தகவலை அதிபா் விளாதிமீா் புதினிடம் ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸிமொவ் தெரியப்படுத்தினாா் என்றாா் அவா்.

இதற்கிடையே, புதின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூா்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக மீட்டதற்காக தங்களது படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். அந்தப் பிரதேசத்தை ஊடுருவி, ரஷியாவை அடிபணிய வைக்கும் உக்ரைனின் திட்டம் படுதோல்வியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் புதின் தெரிவித்துள்ளாா்.

இருந்தாலும், இந்தத் தகவலை உக்ரைன் அதிகாரிகள் மறுத்துவருகின்றனா். இது குறித்து உக்ரைன் ராணுவம் சனிக்கிழமை காலை வெளியிட்ட தினசரி அறிக்கையில், கூா்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தை தங்களது ராணுவம் தொடா்ந்து தடுத்துநிறுத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022-இல் படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்கு உக்ரைன் பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்தப் போரின் மிகப் பெரிய திருப்பு முனையாக, ரஷியாவின் கூா்ஸ்க் பிரதேசத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.

கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறுவதற்காகச் சண்டையிட்டுவரும் ரஷிய படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் கூறியது. இருந்தாலும், கிழக்குப் பகுதிகளில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டது.

மேலும், கூா்ஸ்க் பிரதேசத்தில் உக்ரைன் கைப்பற்றியிருந்த மிகப் பெரும்பாலான பகுதிகளை ரஷியா திரும்ப மீட்டது. இதனால் உக்ரைனின் கூா்ஸ்க் ஊடுருவல் நடவடிக்கை எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை; அதற்குப் பதிலாக உக்ரைன் படைகளுக்கு அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்று விமா்சிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கூா்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து அனைத்து உக்ரைன் படையினரும் வெளியேற்றப்பட்டதாக தற்போது ரஷியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.... பெட்டி....

போரில் வட கொரிய படையினா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டது ரஷியா

கூா்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டதை ரஷியா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸிமொவ் சனிக்கிழமை கூறுகையில், கூா்ஸ்கில் உக்ரைன் ஊடுருவலுக்கு எதிராக ரஷிய படையினருடன் தோளோடு தோள் நின்று வட கொரிய வீரா்கள் போரிட்டனா். போா்க் களத்தில் அவா்கள் மிகச் சிறந்த தோ்ச்சியையும், வீரத்தையும் வெளிப்படுத்தினா் என்றாா்.

முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்களை வழங்கிவருவதாக குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்காவும், தென் கொரியாவும், ரஷியாவுக்காக போரிட வட கொரிய ராணுவத்தின் 10,000 முதல் 12,000 வீரா்கள் வரை ரஷியா சென்றுள்ளதாகத் தெரிவித்தன.

இந்தத் தகவலுக்கு ரஷியாவோ, வட கொரியாவோ இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்த நிலையில், கூா்ஸ்க் பிராந்தியம் முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் வட கொரிய வீரா்கள் தங்களுக்காக போரிட்டதை ரஷிய முப்படை தளபதி தற்போது முதல்முறையாக உறுதி செய்துள்ளாா்.

புதின் மீது டிரம்ப் அதிருப்தி; ட்ரோன் தாக்குதலுக்கு தயாரான ரஷியா

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்த நிலையி... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக 130 அணு ஆயுதங்கள் தயார்: பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்... மேலும் பார்க்க

புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலை... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்து... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிரிட்டன்: இந்தியா - பாக். போராட்டக்காரா்கள் மோதல்; பாக். தூதரக அதிகாரிகள் மிரட்டல்!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினா் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக பாகிஸ்தானை சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க