சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் கா...
கெளரி சீரியலில் புனிதாவுக்கு மாற்றாக புதிய நடிகை!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கெளரி தொடரில் இருந்து நடிகை புனிதா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை விமல் ஐஸு நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கயல் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமான விமல் ஐஸு, குறுகிய காலத்திலேயே ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர். கயல் தொடரில் இவரின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் கெளரி தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவரின் வருகையால் கெளரி தொடரில் மேலும் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பக்தி மற்றும் மாயாஜாலக் கதை என்பதால், இவரின் நடிப்புக்கு ஏற்ற தருணங்கள் இத்தொடரில் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள தொடர்களில் கெளரி தொடரும் ஒன்றாக உள்ளது. பத்மாவதி திரைக்கதை எழுத பரமேஷ்வர் இத்தொடரை இயக்குகிறார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர், இல்லத்தரசிகள் பலரை ரசிகர்களாகக் கொண்டுள்ளது. கெளரியாக சம்யுக்தாவும் துர்காவாக நந்தினியும் நடிக்கின்றனர். நரேஷ் ஈஸ்வர் நாயகனாக நடிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புகழ் பெற்ற நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் இத்தொடரில் நடிக்கிறார்.
இதையும் படிக்க | ஆல்யா மானசாவின் புதிய தொடர்: படப்பிடிப்பு தொடக்கம்!