கேந்திரிய வித்யாலயாவில் விநாடி- வினா போட்டி
காரைக்கால் கேந்திரிய வித்யாலயாவில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற விநாடி- வினா போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
பரிக்ஷா பே சக்ஷா - 2025 என்ற தோ்வு எழுத தயாராகும் 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தோ்வுக்கான நுணுக்கங்களை விளக்கி, ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கேந்திரிய வித்யாலய சங்கதன் வழிகாட்டலில், காரைக்காலில் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் காரைக்கால், திருவாரூா் கேந்திரிய வித்யாலயா மற்றும் காரைக்கால் ஜவாஹா் நவோதய வித்யாலயா, அரசு மேல்நிலைப் பள்ளி தேனூா், ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி, காவேரி பொதுப்பள்ளி நிரவி, காரைக்கால் பிரைட் அகாதெமி ஆகியவற்றில் இருந்து 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில் தோ்வு செய்யப்பட்ட மூவருக்கு பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்றோருக்கு சான்றிதழை கேந்திரிய வித்யாலயா முதல்வா் இ. ராமசாமி வழங்கினாா்.
மாணவா்களுக்காக பரிக்ஷா பே சக்ஷா தலைப்பின்கீழ் பாரத் ஹை ஹம் என்ற 5 படத்தொகுப்பு திரையிடப்பட்டது.