செய்திகள் :

கேன்ஸ் பட விழா நடுவராக பாயல் கபாடியா!

post image

இயக்குநர் பாயல் கபாடியா கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' கடந்தாண்டு நவ. 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெண்களின் காதலையும் தனிமையையும் அவர்களின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு பெண்ணுக்குத் தேவையான சுதந்திர மனநிலையை மையமாக வைத்து இந்தோ - பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக உருவான இப்படம் பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு சாதனையாக கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், விருது வெல்லவில்லை.

இந்த நிலையில், இந்திய இயக்குநர் ஒருவர் சர்வதேச அளவில் பல பரிந்துரைகளுக்குச் சென்றதால் பயால் கபாடியாவைக் கௌரவிக்கும் விதமாக 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில் அவரையும் நடுவர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த விழாவிற்கு உலகம் முழுவதுமிருந்து ஜூரிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இம்முறை, பிரெஞ்சு நடிகை ஜூலியட் பினோஜ் தலைமையில் நடிகர் ஜெர்மி ஸ்ட்ராங்க், நடிகை ஹாலே பெரி, தென்கொரிய இயக்குநர் ஹாங் சன்சூ உள்ளிட்டோருடன் பாயல் கபாடியாவும் நடுவராகிறார். இது பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ஜீவாவின் புதிய படம்!

கேங்கர்ஸ் படத்தின் 2-ஆவது முன்னோட்ட விடியோ!

சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் படத்தின் புதிய விடியோ வெளியாகியுள்ளது.மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கிய கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த ஏப்.24ஆம் தேதி வெளியானது.முழுநீள நக... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் உற்சவம்!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மார்கள் உற்சவ வீதி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் ... மேலும் பார்க்க

விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்!

திரைப்பட விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. நடிக... மேலும் பார்க்க

சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல்: சாதனை படைத்த ரெட்ரோ!

ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் படங்களிலேயே முதல்நாளில் அதிகமான வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குக... மேலும் பார்க்க

மஞ்சு வாரியரிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்? வைரலாகும் விடியோ!

கடைதிறப்பு விழாவுக்குச் சென்ற நடிகை மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் தவறாக நடந்துகொண்டதாக இணையத்தில் விடியோ வைரலாகி வருகிறது.மலையாளத்தில் முன்னடி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூல... மேலும் பார்க்க

சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது

கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.இந்திய கால்பந்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது... மேலும் பார்க்க