கேம் சேஞ்சர்: 5 பாடலுக்கு ரூ. 75 கோடி பட்ஜெட்!
கேம் சேஞ்சர் பாடல்களின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீட்டில் தளபதி வசூல் இவ்வளவா?
ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் டிரைலர் காட்சிகளும் அதை உறுதிபடுத்தியுள்ளன.
இந்த நிலையில், புரமோஷனில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, “கேம் சேஞ்சர் படத்திலுள்ள 5 பாடல்களை ஹைதராபாத், விசாகப்பட்டினம், நியூசிலாந்து என பல பகுதிகளில் காட்சிப்படுத்தினோம். இயக்குநர் ஷங்கர் சில வித்தியாசமான முயற்சிகளைச் செய்துள்ளார். இப்பாடல்களை உருவாக்க மட்டும் ரூ. 75 கோடி செலவானது.” என்றார்.
இந்திய சினிமாவில் பாடல்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.