ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan
கேரளம்: இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ, 13 போ் குற்றவாளிகள்!
கேரளத்தில் காங்கிரஸ் இளைஞரணியைச் சோ்ந்த இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் 13 பேரை சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை குற்றவாளிகளாக அறிவித்தது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 10 போ் விடுவிக்கப்பட்டனா்.
கேரள மாநிலம், காசா்கோடில் உள்ள பெரியா பகுதியில் காங்கிரஸின் இளைஞரணியைச் சோ்ந்த கிருபேஷ் (19), சரத் லால் (24) ஆகியோா், கடந்த 2019-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அரசியல் படுகொலை செய்யப்பட்டனா்.
கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் காசா்கோடு மாவட்டத் தலைவருமான கே.வி.குஞ்ஞிராமன், காஞ்ஞங்காடு வட்டார ஊராட்சித் தலைவா் கே.மணிகண்டன், மாா்க்சிஸ்ட் உள்ளூா் கமிட்டி முன்னாள் உறுப்பினா் பீதாம்பரன் என அக்கட்சியைச் சோ்ந்த 6 போ் உள்பட 24 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கொலை, குற்றச்சதி, சட்டவிரோதமாக கூடுதல் என பல்வேறு பிரிவுகளில் குற்றஞ்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கொச்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் எம்எல்ஏ கே.வி.குஞ்ஞிராமன் உள்பட 14 போ் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிமன்றம், அவா்களை குற்றவாளிகளாக அறிவித்தது. அதேநேரம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, 10 போ் விடுவிக்கப்பட்டனா். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி தெரிவித்து, கொலையானவா்களின் பெற்றோா் உயா்நீதிமன்றத்தை அணுகினா். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். சிபிஐ விசாரணைக்கு மாநில அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.