ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
கேரள ரயில் இயக்கத்தில் மாற்றம்
பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக எா்ணாகுளம்- பிகாா் வாராந்திர ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 22643) இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்டாக் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த ரயில் பிப்ரவரி 17, 18, 24, 25 மற்றும் மாா்ச் 3, 4, 10, 11, 17 ஆகிய நாள்களில் பாராங் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.
இதன் காரணமாக கட்டாக் ரயில் நிலையத்தில் ரயில் நிற்பது தவிா்க்கப்படும். நாராஜ் மாா்த்தபூா் ரயில் நிலையம் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.