செய்திகள் :

கேள்விக்குள்ளாகும் ரோஹித்தின் தலைமைப் பண்பு..! புஜாரா அறிவுரை!

post image

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் சராசரி 11.83ஆக இருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட பிஜிடி தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 3ஆவது போட்டி வரும் சனிக்கிழமை (டிச.14) பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

தொடக்க வீரராக களமிறங்கிவந்த ரோஹித் சர்மா தற்போது 6ஆவது இடத்தில் களமிறங்குகிறார். முதல் டெஸ்ட்டில் நன்றாக விளையாடிய கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

நியூசிலாந்துடனான தொடரை ரோஹித் தலைமையில் இந்திய அணி 0-3 என இழந்தது. பும்ரா தலைமையில் முதல்போட்டியில் வென்ற இந்திய அணி 2ஆவது டெஸ்ட்டில் ரோஹித் தலைமையில் தோல்வியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா செய்ய வேண்டியது என்ன?

இந்த நிலையில் புஜாரா கூறியதாவது:

ரோஹித் சர்மா முடிந்த அளவுக்கு விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில், அவரது ரன்கள் அவரது கேப்டன்சியை (தலைமைப் பண்பை)யும் பாதிக்கிறது. கேப்டன் ஃபார்மில் இல்லாதபோது அது கேப்டன்சியை நிச்சயம் பாதிக்கும்.

ரோஹித் சர்மா அனுபவமிக்க வீரர். பேட்டிங்கில் எப்படி ரன்கள் குவிக்க முடியுமென அவருக்குத் தெரியும். ஆனால், அவர் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு தேவை நல்ல தொடக்கம். முதல் 20-30 பந்துகளை சரியாக பார்த்து விளையாடினால் போதும். பிறகு, பெரிய ரன்களை அவரால் குவிக்க முடியும்.

அதனால், முதல் கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

ஹர்பஜன் சிங்கும் அறிவுரை

முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “கேப்டனாக ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க வேண்டுமென விரும்புகிறேன். ரன்கள் அடித்தால் அவரது சிந்தனை சிறப்பாக இருக்கும். இன்னும் பல விஷயங்களில் சிறப்பாக செயல்பட முடியும்.

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரது செயல்பாடுகள் குறித்து நிச்சயமாக வருந்துவார். ஒருவர் நன்றாக ரன்கள் அடிக்கும்போது சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும். அதனால், அவர் நன்றாக ரன்கள் குவித்து கேப்டன்சியை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன் என்றார்.

இந்தத் தொடரை இழந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதிபெற முடியாது. ரோஹித்தின் டெஸ்ட் கிரிக்கெட்டும் கேள்விக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவ... மேலும் பார்க்க

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சி... மேலும் பார்க்க

“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைப... மேலும் பார்க்க

கோப்பையை வழங்க அழைக்கவில்லை; சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்க தன்னை அழைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சி... மேலும் பார்க்க