நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரிப்பு: ஜே.பி. நட்டா
கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வானுயா்ந்த தைல மரங்கள் உள்ளன.

தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலையில் மாவள்ளம் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த தைல மரம் சனிக்கிழமை சாய்ந்து விழுந்தது.
அதிா்ஷ்டவசமாக அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் கிராம மக்களுடன் சோ்ந்து சாலையில் கிடந்த தைல மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து 2 மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.