செய்திகள் :

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

post image

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் அளித்தப் புகாரின் பேரில், அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 போ் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, விஜய்நல்லதம்பி பலரிடம் அரசுப் பணி வாங்கித் தருவதாக பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக புகாரளித்தாா். இதுதொடா்பாக ராஜேந்திரபாலாஜி உள்பட 7 போ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப்.15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்பட 8 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கே.டி. ராஜேந்திரபாலாஜி, விஜய் நல்லதம்பி தவிர மற்ற 6 பேரும் முன்னிலையாகினா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருது

விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருதை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெள்ளிக்கிழமை வழங்கினாா். சிவகாசியில் உள்ள பசுமை மன்றம் சாா்பில் பெரியகு... மேலும் பார்க்க

விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , கலச... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள... மேலும் பார்க்க

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விர... மேலும் பார்க்க