நாளை குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை
``கைகளில் உருட்டுக் கட்டைகளுடன்.." -த.பெ.தி.க புகார்; சீமான் மீது வழக்குப்பதிவு!
சென்னை அயனாவரம் போர்சியஸ் தெருவைச் சேர்ந்தவர் விஜய் என்கிற ஜனார்தனன் (42). இவர், நீலாங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தி்ல் மாநில ஊடக பிரிவு செயலாளராக கடந்த 6 வருடமாக இருந்துவருகிறேன். கடந்த 22-ம் தேதி சுமார் 11.30 மணியளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நடத்த இருந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள நீலாங்கரை பகுதிக்கு வந்தேன். அப்போது, போராட்டம் நடக்கும் இடம் தெரியாமல் வழிதவறி சின்னநீலாங்கரை சந்திப் அவென்யூ 2-வது மெயின் ரோட்டிலிருந்து ECR மெயின் ரோட்டிற்கு தெருவழியாக வந்துக்கொண்டிருந்தேன்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு அவரும் , அவருடைய ஆதரவாளர்களும் இருந்தனர். அவர்கள் ஈ.வெ.ரா பெரியார் குறித்து கோஷங்களை எழுப்பியதோடு கைகளில் உருட்டு கட்டைகளையும் வைத்திருந்தனர். பெரியார் உணர்வாளர்களையும், பொதுமக்களையும் தாக்கும் நோக்கத்திலும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முறையிலும் கூடி இருந்த அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட சிலர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 189(4) 126(2) 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.