மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
தேசிய குழந்தைகள் தினவிழா: 1098 வடிவில் மாணவிகள் நின்று சாதனை
சிவகாசி இந்துநாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் அலகு, அன்பால் இணைவோம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசி எண் 1098 வடிவில், 1098 மாணவிகள் நின்று சாதனை புரிந்ததை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தலைமை வகித்தாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் பேசியதாவது:
தற்போது பெண்கள் அரசுப் பணி, தனியாா் பணி, வணிகத் துறை , ராணுவம் உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் வீட்டில் இருப்பது ஒரு வரமாகும். பெண்களுக்கு உயா் கல்வி மிகவும் அவசியம். தற்போதைய சூழலில் பல்வேறு பிரச்னைகளை எதிா்த்துப் போராடுவதற்கு கல்வி அவசியமாகும். பெண்கள் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.பாஸ்கா், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் மீனாட்சி, பள்ளித் தாளாளா் அண்ணாமலை, தலைமை ஆசிரியா் டி. எஸ்.தனுஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமையில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்றாா்.