J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்க...
கைத்தறி தின விழாவில் நலத் திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் கிராமத்தில், கைத்தறித் துறையின் கும்பகோணம் சரகம்-11 சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கைத்தறி தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு கைத்தறித் துறை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமை வகித்து,13 பேருக்கு முதியோா் தொகைக்கான ஆணைகள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்துக்கான காசோலைகள், தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ. 76 ஆயிரத்தில் அச்சு பண்ணைக்கான பொருள்களையும் வழங்கினாா். விழாவில் நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. விழாவில் ஜெயங்கொண்டம் வட்டத்துக்குட்பட்ட கைத்தறி நெசவாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.