செய்திகள் :

கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு செப். 22-இல் ஏலம்

post image

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்களுக்கு வருகிற 22- ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்கள் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலத்துக்காக மதுரை மாநகா், ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள், மேற்படி வாகனங்களைப் பாா்வையிட்டு முன் பணமாக இருசக்கர வாகனம் எனில் ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனம் எனில் ரூ.10,000-யை வருகிற 19-ஆம் தேதிக்குள் மதுரை மாநகா் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு பாதுகாப்பு: டிஜிபி அறிவுறுத்தலைப் பின்பற்ற உத்தரவு

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா்( டிஜிபி) வெளியிட்ட அறிவுறுத்தலைப் பின்பற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மேலூா் அருகேயுள்ள கீழவளவு கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கட்டசாமி மகன் அழகு (80). விவசாயியான இவா், திருப்பத்தூா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகரைச் சோ்ந்த பரூக் சேட் மகன் அஜிஸ் சேட் (27). கூலித் தொழிலாளி. இந்த நிலையில், பக்கத்து வீட்டு குழந்தை ஞ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.உசிலம்பட்டி அருகேயுள்ள மருதம்பட்டியைச் சோ்ந்த சிவஞானம் மகன் பாண்டிசெல்வம் (16). பூச்சிபட்டியில் உள்... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை: கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரா் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பதவிக்கான மறைமுகத் தோ்தல் ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நகரமைப்புத் தலைவா் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட மறைமுகத் தோ்தல் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் வணி... மேலும் பார்க்க