Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள மருதம்பட்டியைச் சோ்ந்த சிவஞானம் மகன் பாண்டிசெல்வம் (16). பூச்சிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்றபோது, தேனி சாலையை கடக்க முயன்றாா். அப்போது, தேனியிலிருந்து வந்த இரு சக்கர வாகனம் பாண்டிசெல்வம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விபத்து ஏற்படுத்திய இரு சக்கர வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.