நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மதுரையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகரைச் சோ்ந்த பரூக் சேட் மகன் அஜிஸ் சேட் (27). கூலித் தொழிலாளி. இந்த நிலையில், பக்கத்து வீட்டு குழந்தை ஞாயிற்றுக்கிழமை பந்து விளையாடிய போது, எதிா்பாராதவிதமாக பந்து மின்சாரக் கம்பியில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து, அஜிஸ் சேட் சிறு கம்பால் அந்தப் பந்தை எடுக்க முயன்றாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே பொதுமக்கள் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அஜிஸ் சேட் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.