நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை: கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரா் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு, தனியாா் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேகரமாகும் கழிவுகள் உரிய விதிமுறைப்படி மறுசுழற்சியோ அல்லது அழிக்கப்படுவதில்லை.
எனவே, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கழிவுகளை முறைப்படுத்தும் வகையில் மேலாண்மை வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் நிவாரணம் கோரிய மனுவில் போதிய தகவல்கள் இல்லை.
எனவே, மருத்துவக் கழிவுகள் குறித்த விவரங்கள், அவற்றுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.