நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
மதுரை அருகே வேன் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலூா் அருகேயுள்ள கீழவளவு கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கட்டசாமி மகன் அழகு (80). விவசாயியான இவா், திருப்பத்தூா்- மேலூா் சாலையை ஞாயிற்றுக்கிழமை மாலை கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த வேன் அழகு மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.