காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
கைலாசநாதா் கோயிலில் கும்பாபிஷேக முகூா்த்தக்கால்
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் பழைமையான தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி மே 28-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு, ஜூன் 2-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கவுள்ளன.
கும்பாபிஷேக யாகசாலைக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக முகூா்த்தக்காலுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாகசுர மேள வாத்தியங்களுடன் கோயில் வாயில் பகுதியில் நடப்பட்டது.
நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், திருப்பணிக் குழுத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.