செய்திகள் :

கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

post image

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் 183 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடந்த 15 ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸை தில்லி கேபிடல்ஸ் வீழ்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் தில்லி அணி வெற்றி பெற்றிருந்தது.

சிஎஸ்கேவின் கோட்டை தகர்கிறதா?

சென்னை சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை குறைக்கும் விதமாக கடந்த சில போட்டிகளில் சென்னை அணியின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

சேப்பாக்கம் திடலில் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியடைந்தது ஒருபுறமிருக்க, அந்த இரண்டு தோல்விகளும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் தோல்வி என்பதே சிஎஸ்கேவின் கோட்டை தகர்கிறதா என்ற கேள்விக்கு காரணமாக அமைகிறது.

இதையும் படிக்க: மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாகிறாரா எம்.எஸ்.தோனி?

ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் (2008) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. அதன் பின், இத்தனை ஆண்டுகளில் ஆர்சிபி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட சிஎஸ்கேவை வீழ்த்தியது கிடையாது. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அசத்தியது ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பெங்களூருவுக்கு எதிரான தோல்வியிலிருந்து வெளிவராத சிஎஸ்கே ரசிகர்களுக்கு தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான தோல்வி மற்றுமொரு பேரதிர்ச்சியாக அமைந்தது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் தில்லி கேபிடல்ஸ் சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றதே கிடையாது. ஆனால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக தொடர்ந்த சிஎஸ்கேவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது தில்லி கேபிடல்ஸ்.

சேப்பாக்கம் திடலில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியபோதிலும், அதன் பின் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அந்த மூன்று தோல்விகளில் இரண்டு தோல்விகள் சேப்பாக்கம் திடலில் ஏற்பட்டது என்பதே ரசிகர்களின் மிகப் பெரிய கவலை.

வெறும் 4 போட்டிகள் மட்டுமே முடிந்திருப்பினும், ஹாட்ரிக் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. குறிப்பாக, தனது கோட்டையான சேப்பாக்கத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சேப்பாக்கத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற பொறுப்பும் சிஎஸ்கேவுக்கு இருக்கிறது.

இதையும் படிக்க: போட்டியின் நடுவே திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? மௌனம் கலைத்த பாண்டியா!

இனிவரும் போட்டிகளில், குறிப்பாக சேப்பாக்கம் திடலில் நடைபெறும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஐபிஎல்: நேற்று சென்னை.. இன்று ஹைதராபாத்! 4-ஆவது தோல்வி!

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 153 ரன்கள் வெற்றி இலக்கை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.4 ... மேலும் பார்க்க

முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ... மேலும் பார்க்க

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் களைகட்டுமா? நாளை டிக்கெட் விற்பனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் அடுத்த வெள்ளிக்கிழமை(ஏப். 11) நடைபெறுகிறது.இந்த நிலை... மேலும் பார்க்க

முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்!

தன்னால் முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அண... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் பேட்டிங்; 300 ரன்களா? குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜரா... மேலும் பார்க்க

சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அந்த அணி வீரர் சந்தீப் சர்மா பாராட்டியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ... மேலும் பார்க்க