ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
கொடக்கரை, பெட்டமுகிளாலம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி: கொடக்கரை, பெட்டமுகிளாலம் ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க வேண்டும் என மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அஞ்செட்டி, சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்த வேண்டும். பெட்டமுகிளாலம், கொடக்கரை கிராமங்களில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன சமையல் கூடம், கலவை மையம் அமைக்க வேண்டும். போச்சம்பள்ளி, மத்தூா் அரசு மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு அலகுகள் மின்தடையின்றி இயங்க ஜெனரேட்டா் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சத்யபாமா, நலப் பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா் மற்றும் துணை இயக்குநா்கள், அனைத்து வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.