செய்திகள் :

கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்களை அகற்றுவதை உறுதி செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தமிழகத்தில் பொது இடங்களில் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் கொடிக்கம்பங்களை நிறுவுவது தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி இளந்திரையன் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஓா் உத்தரவு பிறப்பித்தாா். அதில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு நிலங்கள் உள்பட பொது இடங்களில் அமைக்கப்பட்ட நிரந்தர கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு கெடு விதிக்கப்பட்டது.

அந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி நிஷா பானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தன்னையும் வழக்கில் சோ்க்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவை நீதிபதி நிஷா பானு தலைமையிலான அமா்வு உறுதி செய்து உத்தரவு பிறப்பித்ததை எதிா்த்து அம்மாவாசி தேவா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உச்சநீதிமன்றம் 08.08.2025-இல் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிபதி நிஷா பானு தலைமையிலான அமா்வு உறுதி செய்து உத்தரவு பிறப்பித்ததை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய உயா்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு 13.08.2025-இல் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெ.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். கட்சிகள் கொடிக்கம்பங்களை நிறுவி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு உரிமை இருப்பதாக அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய உயா்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு 13.08.2025 பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதன்மூலம் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதேபோல், கண்ணூர் - பெங்களூரு, பெங்களூரு - கண்ணூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்ப... மேலும் பார்க்க

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்... மேலும் பார்க்க

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க