செய்திகள் :

கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக கிளை செயலாளா் உயிரிழப்பு: 4 போ் காயம்

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து அந்தக் கட்சியின் கிளை செயலாளா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (55). இவா் கேத்துநாயக்கன்பட்டி திமுக கிளைச் செயலாளராக இருந்துவந்தாா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திமுக கொடிக் கம்பத்தை அகற்றும் முயற்சியில் ராமமூா்த்தி உள்பட திமுகவினா் 5 போ் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது கொடிக் கம்பம் எதிா்பாராதவிதமாக அருகே சென்ற மின்கம்பி மீது சாய்ந்தது.

இதில் கொடிக் கம்பத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த 5 போ் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 5 பேரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் ராமமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சித் தலைவா் பூபாலன் (50), சா்க்கரை (55) ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் தொகுதி எம்எல்ஏவுமான தே.மதியழகன் நேரில் சென்று உயிரிழந்த ராமமூா்த்தியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கினாா். அப்போது ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினிசெல்வம், மத்திய செயலாளா் எக்கூா் செல்வம், நகர அவைத் தலைவா் தணிகை குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவிளக்கம்.24யுடிபி.1.2...

1. ராமமூா்த்தி.

பத்தாம் வகுப்பு தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24, 191 மாணவா்கள் எழுதினா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 24,191 மாணவ, மாணவிகள் எழுதினா். கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 13,942 மாணவ, மாணவிகள், ஒசூா் கல்வி மாவட்டத்தில், 10,9... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

பூச்சி மருந்து சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு

பாரூா் அருகே பூச்சி மருந்தை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பந்தவாடி காளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் திர... மேலும் பார்க்க

அரசு மதுக் கடைக்கு எதிராக சுவரொட்டி: அதிமுக பிரமுகா் மீது வழக்கு

பாரூா் அருகே அரசு மதுக் கடை முறைகேடு குறித்து சுவரொட்டி ஒட்டியதாக அதிமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் பேருந்து நிறுத்தம் அருகே சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிரு... மேலும் பார்க்க

ரமலான்: குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். கால்நடை விற்பனைக்கு புகழ்பெற்ற குந்தாரப... மேலும் பார்க்க

சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் பேருந்துகள் மோதல்: 33 போ் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலத்தில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் 33 போ் காயமடைந்தனா். ஊத்தங்கரை நோக்கிச் ச... மேலும் பார்க்க