செய்திகள் :

கொடுமுடி அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து: தென்னந்தோப்பு சேதம்

post image

கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமடைந்தன.

கொடுமுடி அருகே ஊஞ்சலூா் தெற்கு தெருவில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் ஊஞ்சலூா் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் அருகில் உள்ள தேவகி என்பவரின் தென்னந்தோப்புக்குள் தீப் பரவியது. இதில் தென்னை மரங்கள் தீயில் எரிந்து கருகின.

தகவலின்பேரில் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலா் மலைக்கொழுந்து தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஆடுகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் பகுதியில் ஆடுகளைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு, நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, நாய் உயிரிழந்தன. தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 206 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்... மேலும் பார்க்க