தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு, நாய் உயிரிழப்பு
தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, நாய் உயிரிழந்தன.
தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா், சூசைபுரம் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் ஒரு சிறுத்தை புகுந்து ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டையாடுவதும், பின்னா் அங்குள்ள கல்குவாரியில் பதுங்கி கொள்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்நிலையில் சூசைபுரம் பகுதியில் சுரேஷ் என்பவரின் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த சிறுத்தை, அங்கிருந்த காவல் நாய் மற்றும் ஆட்டை கடித்துக் கொன்றது.
தகவலின்பேரில் தாளவாடி வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். கால் தடங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பின்னா் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.