தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
கொடுமுடி அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து: தென்னந்தோப்பு சேதம்
கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமடைந்தன.
கொடுமுடி அருகே ஊஞ்சலூா் தெற்கு தெருவில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் ஊஞ்சலூா் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் அருகில் உள்ள தேவகி என்பவரின் தென்னந்தோப்புக்குள் தீப் பரவியது. இதில் தென்னை மரங்கள் தீயில் எரிந்து கருகின.
தகவலின்பேரில் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலா் மலைக்கொழுந்து தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.