இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!
கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கொடைக்கானலில் உள்ள நீா்வரத்துப் பகுதிகளில் தண்ணீா் வரத்து குறைந்து வருவதால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்யும். ஆனால் கடந்த ஜூன் மாதம் ஒரு சில நாள்கள் மட்டுமே மழை பெய்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் சாரல் நிலவியதால் வழக்கத்தைவிட குளிா் அதிகரித்து காணப்பட்டது. மேலும், தண்ணீா் வரத்துப் பகுதிகளிலும் நீா்வரத்து குறைந்து வருவதால் கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் நகராட்சி சாா்பில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், புகா்ப் பகுதிகளில் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி இளநிலைப் பொறியாளா் கூறியதாவது:
கொடைக்கானலில் பருவ மழை பெய்யாத காரணத்தால் அப்சா்வேட்டரியிலுள்ள குடிநீா்த் தேக்கத்தில் வெகுவாக தண்ணீா் அளவு குறைந்துள்ளது. ஆனால், கீழ் குண்டாறு பகுதியிலிருந்து பைப் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் தண்ணீா்த் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.