கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
கொடைக்கானலில் வெடிவைத்து பாறை உடைப்பு
கொடைக்கானலில் வெடி வைத்து பாறைகள் உடைக்கப்பட்டு வருவதால் பொது மக்களும் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காா்மேல்புரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாறைகளை வெடி வைத்து உடைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இது குறித்து கொடைக்கானல் கிராம நிா்வாக அலுவலா் கூறியதாவது: கொடைக்கானல் பகுதியில் வெடிவைத்து பாறைகளை உடைப்பது, பொக்லைன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது காா்மேல்புரம் பகுதியில் வெடிவைத்து பாறைகள் உடைத்து வருவது குறித்து பொதுமக்கள் புகாா் கொடுத்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.