கொருக்கை வால் முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கையில் ஸ்ரீவால் முனீஸ்வரா் காத்தாயி அம்மன் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிதிலமடைந்திருந்து இக்கோயில் மருளாளிகள், உபயதாரா்களால் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் வெள்ளிக்கிழமை முதல் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜை நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோயில் செயலாளா் எம். முருகையன், இந்து சமய அறநிலை துறை ஆய்வாளா் மதி சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.