8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
முப்பதுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் இளங்கோவன்( 30) இவா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி கொலை வழக்கில் தொடா்புடைய அவரது உறவினா் தனுஷ், நண்பா் அஸ்வின் குமாா் மற்றும் சிறுவன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.