செய்திகள் :

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் சிக்கிய கரூர் குடும்பம்; குழந்தைகள் உட்பட மூவர் பலி; நடந்தது என்ன?

post image

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (வயது: 40). இவரது மனைவி மதுமிதா (வயது: 35).

இந்த தம்பதிக்கு தியா (வயது: 10), ரிதன் (வயது: 3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அதேபோல், மதுமிதாவின் தந்தை முத்துக்கிருஷ்ணன் (வயது: 61). இவர்கள் ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக டெல்லி சென்றுள்ளனர்.

அங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டுக் கடந்த 28-ம் தேதி கொல்கத்தாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றவர்கள் கொல்கத்தாவின் மச்சுவா பஜாரில் அமைந்துள்ள ருத்ராஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரபு, அவரது மனைவி மதுமிதா ஆகிய இருவரும் வெளியே சென்று இருந்த நிலையில், அந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் அந்த ஹோட்டலில் இருந்த 14 பேர் உயிரிழந்தனர். இதில், கரூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்

தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊரான கரூர் கொண்டு வருவதற்குப் பிரபு குடும்பத்தினர் அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகில் உள்ள ஜோதிவடம் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களைக் கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மூலமாக மேற்குவங்க அரசுத்துறை அதிகாரிகளிடம் விரைவாகக் கரூர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பேசி உள்ளதாக, கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மும்பை: ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 198 கடைகள் சேதம்; உயிர்தப்பிய மக்கள்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் குரோமா ஷோரூம் உள்ளிட்ட கடைகள் இருக்கும் பாந்த்ரா பஜார் எனும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேர... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 14 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள ருதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இத் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். மக்கள் நெருக்கம் மிகுந... மேலும் பார்க்க

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார்.அப... மேலும் பார்க்க

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் ... மேலும் பார்க்க

கோத்தகிரி: குறைமாத குட்டி ஈன்று இறந்து கிடந்த தாய் யானை.. என்ன காரணம்? - குழப்பத்தில் வனத்துறை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள நட்டக்கல் பகுதியயைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழக்கமாக தேயிலை பறிக்கும் பணிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட வனப்பகுதியில்... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

மும்பை தென்பகுதியில் இருக்கும் பெல்லார்ட் எஸ்டேட்டில் அமலாக்கப்பிரிவின் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுலகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அமலாக்கப் பிரிவு அலுவலக கட்டிடத்தின... மேலும் பார்க்க