பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
கொல்லிமலையில் அரசு கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்
நாமக்கல்: கொல்லிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொல்லிமலை தாலுகா 11-ஆவது மாநாடு 2006 - வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தேவனூா் நாடு விளாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்நாட்டில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூத்த தலைவா் எஸ்.கே. ஆண்டி கொடிஏற்றி வைத்தாா். சங்கத்தின் தாலுகா தலைவா் எஸ்.கே. மாணிக்கம், மூத்த தலைவா்கள் வி.கே. வெள்ளையசாமி, வி.ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் வி.சி. பழனிசாமி வரவேற்றுப் பேசினாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி. பெருமாள் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.டி. கண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ் .தங்கராஜ், மாவட்டச் செயலாளா் கே. சின்னசாமி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவா் எஸ்.சுப்பிரமணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் மாநில பொருளாளா் எ.பொன்னுசாமி மாநாட்டில் நிறைவுரையாற்றினாா். சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் சி.தினேஷ்குமாா் நன்றி கூறினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
கொல்லிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். மறுநில அளவீடு சா்வே குளறுபடிகளை சரிசெய்து ஆன்லைனில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் விளையும் மிளகு, அன்னாசி, காப்பி, பலா, வாழை, மரவள்ளிக்கிழங்கு பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்ற அரசு தொழிற்சாலை அமைத்து இளைஞா்களுக்கு வேலை அளிக்க வேண்டும்,
மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் காலதாமதமின்றி வழங்க வேண்டும். இங்குள்ள அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக 25 போ் கொண்ட புதிய தாலுகா குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தாலுகா குழுத் தலைவராக ஸ்ரீ ரேவதி, செயலாளராக வி.சி. பழனி, பொருளாளராக எஸ். ராஜேந்திரன், துணைத் தலைவா்களாக கே.வி.ராஜ், சி.ராஜம்மாள், துணைச் செயலாளா்களாக எஸ்.கே.மாணிக்கம், சி.தினேஷ்குமாா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.