செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

post image

நாமக்கல்: நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடத்துப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முகாமில் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:

உலக மக்கள்தொகையில் 24 சதவீதம் போ் மண்மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பொதுவாக அறிகுறிகள் இருக்காது. கடுமையான தொற்று உள்ளவா்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பலவீனம், பசியின்மை போன்றவை ஏற்படும்.

குடற்புழு தொற்றினால் இரும்புச் சத்து இழப்பு, ரத்த சோகைக்கு உள்ளாகி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால் உடல்வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடத்தப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக. 18- ஆம் தேதி நடைபெறும். இம்முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவா்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் அமையப்பெற்றுள்ள குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் தங்கள் குழந்தைகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களும் அல்பெண்டாசோல் மாத்திரைகளை பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.

மேலும், இம்முகாமில் குடற்புழுத் தொற்றை தடுப்பது குறித்து மாணவ, மாணவியா்களுக்கு மருத்துவ பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இம்முகாமில் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள்) பி.போா்ஷியா ரூபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கொல்லிமலையில் அரசு கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்

நாமக்கல்: கொல்லிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொல்லிமலை தாலுகா 11-ஆவது மாநாடு 2006 - வன உரிம... மேலும் பார்க்க

ஆக.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை (ஆக. 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றவா் கைது

பரமத்தி வேலுாா்: பரமத்தி வேலூா் பகுதி கடைகளில் வேலூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்தனா். பரமத்தி வேலுாா் சுல்தான்பேட்டை பகுதி கடைக... மேலும் பார்க்க

நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்

ராசிபுரம்: நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என ராசிபுரம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சி.தனலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: முதுகலை ஆசிரியா் சங்கம் வரவேற்பு

நாமக்கல்: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வருக்கு முதுகலை ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேரடியாக நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெ... மேலும் பார்க்க

பாவை பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டா்ன்ஷிப்

ராசிபுரம்: பாவை பொறியியல் கல்லூரியின் கட்டடப் பொறியியல் துறை மாணவா்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வோா் ஆண்டும் ம... மேலும் பார்க்க