``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றவா் கைது
பரமத்தி வேலுாா்: பரமத்தி வேலூா் பகுதி கடைகளில் வேலூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்தனா்.
பரமத்தி வேலுாா் சுல்தான்பேட்டை பகுதி கடைகளில் புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூா் போலீஸாா், சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள தேநீா் கடை, பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா் அவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் சக்திவேல் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூா் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.