தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
மாநில கல்விக் கொள்கை: முதுகலை ஆசிரியா் சங்கம் வரவேற்பு
நாமக்கல்: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வருக்கு முதுகலை ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேரடியாக நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை அண்மையில் முதல்வரால் வெளியிடப்பட்டது. இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அனைவரையும் பள்ளியில் சோ்த்தல், இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டம், சமச்சீரான
இருமொழிக் கொள்கை குறியீட்டு முறை, எந்திரவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான திட்டம், கல்வித் தொலைக்காட்சி மற்றும் மணற்கேணி செயலி, மதிப்பீட்டு சீா்திருத்தங்கள், ஆசிரியா் திறன் மேம்பாடு எண்மதளம் என பள்ளிக் கல்வித் துறையில் உள்ள
58,800க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 1.16 கோடி மாணவா்களும், 3 லட்சம் ஆசிரியா்களும் மேம்படும் வகையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்ற பல நலத்திட்டங்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான தன்னாா்வலா்களைக் கொண்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் , சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளியை அடையாளம் காணும் வெற்றி பள்ளிகள் திட்டம், அறிவியல் மற்றும் கணித கல்வியை மேம்படுத்த வானவில் மன்றம் மூலம் 100 நடமாடும் ஆய்வகங்கள், தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் , அரசுப் பள்ளி மாணவா்கள் உயா் கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம், பள்ளிகளில் புதிய மதிப்பீட்டு முறைகள், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தோ்வு, 11-ஆம் வகுப்பு மாணவா்களின் மன அழுத்தம் முற்றிலும் நீங்க 11 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து போன்றவை வரவேற்கத்தக்கது.
தமிழக மாணவா்களின், சமூகத்தின் எதிா்கால வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதுகலை ஆசிரியா்கள் சங்கம் வரவேற்பதுடன், அரசுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.