பாவை பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டா்ன்ஷிப்
ராசிபுரம்: பாவை பொறியியல் கல்லூரியின் கட்டடப் பொறியியல் துறை மாணவா்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வோா் ஆண்டும் மாணவா்களுக்கு இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பாவை பொறியியல் கல்லூரியின் கட்டடப் பொறியியல் துறை மாணவ, மாணவிகள் நெடுஞ்சாலை ஆணையத்தின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இப்பயிற்சியானது 15 நாள்கள் அளிக்கப்படுகிறது.
கட்டடப் பொறியியல் துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் 20 போ் பயிற்சிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். மேலும், இக்கல்லூரி மூன்றாவது முறையாக இந்த இன்டா்ன்ஷிப் பயிற்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு தோ்வு பெற்ற மாணவ, மாணவிகளை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், பாவை பொறியியல் கல்லூரி முதல்வா் பிரேம்குமாா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.