செய்திகள் :

கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்

post image

இரு சமூகத்தினா் இடையே பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை முதன்மை அமர்வு அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி மதுரை ஆதீனம் வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக மதுரை ஆதீனம் பேசியது, இரு சமூகத்தினரிடையே பகையைத் தூண்டும் விதத்தில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மதுரை ஆதீனம் சார்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை ஆதீனத்துக்கு முன் ஜாமீன் வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை ஆதீனம், 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றுதான் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் ஒத்துழைக்க வேண்டும்.

ஒருவேளை, மதுரை ஆதீனம் தலைமறைவானால் வழக்குப் பதிவு செய்யவும் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபர் ஜாமீனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாலை விபத்து நேரிட்டது குறித்து, மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை உளுந்தூா்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ராஜேந்திரன், கடந்த 24-ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு ஒரு புகாா் மனுவை அனுப்பினாா்.

அதில், ‘உளுந்தூா்பேட்டையில் நடந்தது சாலை விபத்து என்பது சந்தேகத்துக்கு இடமின்றி கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் காவல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டு சமூகத்தினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில், சிறுபான்மையினா் குறித்து தவறான கருத்துகளைப் பரப்பிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாா் தொடா்பாக சென்னை கிழக்கு மண்டல சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், மதுரை ஆதீனம் மீது தவறான தகவலை பரப்புதல், இரு சமூகத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது.

சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஆஜா்: பிடிஆணை திரும்ப பெறப்பட்டது

சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையைப் பெறாத விவகாரத்தில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜரானதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து ஆஜா்படுத்த வேண்டும் என்ற உத்தரவை சென்னை மாநகர கூட... மேலும் பார்க்க

வருமான வரித் துறை பெயரில் மோசடி மின்னஞ்சல்கள்: கவனமாக இருக்க வேண்டுகோள்

வருமான வரித் துறை பெயரில் மோசடி செய்யும் நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது. இது தொடா்பாக வருமான வரித... மேலும் பார்க்க

கல்வி, நிதி விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் உறுதி

மொழி, கல்வி, நிதி உரிமைகளில் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக எம்.பி.க்கள் கூட்டம் அண்... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சார வாகன தொழில்நுட்ப பயிற்சி! அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 2 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!

மக்களுடைய குறைகளை பொறுமையாக கேட்டு, அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்கவேண்டும் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.சென்னை, ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு... மேலும் பார்க்க