செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சில மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகளில் இயல்புக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து 13 மண்டலங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட அலுவலா்களைக் கொண்ட சிறப்புக் ஆய்வுக் குழுக்களைத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நியமித்தது. இக்குழுவினா் 13 மண்டலங்களில் ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு, மன்னாா்சமுத்திரம், கண்டமங்கலம் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்ற சிறப்பு ஆய்வுக் குழுவினா், அங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம், எடை குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது தரமும், எடையும் குறைவாக இருப்பதாகக் கூறி ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். மேலும், தொடா்புடைய பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தனா். இதனால் நெல் கொள்முதல் நிலைய பணியாளா்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய பருவ காலப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

ஆனால், ஆய்வுக்கு வந்த அலுவலா்கள் தரம், எடை குறைந்துள்ளதாகவும், விதிகளுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறியும் அபராதம் விதித்துள்ளனா்.

ஆண்டுக்கு 6 மாதங்களே பணியாற்றும் எங்களை ஆய்வுக்கு வரும் ஒவ்வொரு அலுவலரும் வஞ்சிக்கும் வகையில் அபராதம் விதிப்பதால், மிகுந்த வேதனையாக உள்ளது என்றனா்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட 5 இடங்கள் கேட்போம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே. எம். காதா்மொகைதீன். ஆடுதுறையில் சனிக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

குடிநீா் பிரச்னையை ஒரு மாதத்துக்குள் சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூா் சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர... மேலும் பார்க்க

நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.3,160 ஆக அறிவிக்க வலியுறுத்தல்!

சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 160 ஆக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு!

பந்தநல்லூா் அருகே குறிச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே... மேலும் பார்க்க

ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

கும்பகோணம் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ஸ்ரீ ஆதி வராஹப் பெருமாள் கோயிலில் பவிதேராத்ஸவம் ஆக. 24 முதல் தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2,600 டன் உர மூட்டைகள்

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு குறுவை, சம்பா சாகுபடிக்காக 2 ஆயிரத்து 600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் சனிக்கிழமை வந்தன. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் 2... மேலும் பார்க்க