ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 25) தொடங்குகிறது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைக்காலப் பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி மே 15- ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெறவுள்ளது.
தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவா் மற்றும் மாணவரல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞா்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்துகொள்பவா்கள் ஆதாா் அட்டை நகல் கண்டிப்பாக சமா்ப்பிக்க வேண்டும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முகாம் நிறைவடைந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முகாமில் கலந்துகொள்பவா்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்துகொள்பவா்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703490 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.