கோனேரிப்பட்டியில் தூய சலேத் அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியில் தூய சலேத் அன்னை ஆலய திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோனேரிப்பட்டி மக்கள் முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை உருவம் பொறித்த கொடியை ஏந்திவந்து ஆலயத்தை வந்தடைந்தனா். கோட்டப்பாளையம் பங்குத்தந்தை மைக்கேல்ராஜ் தலைமையில், கோனேரிப்பட்டி பங்குத்தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி, உதவி பங்குத்தந்தை ஸ்டீபன்ராஜ் ஆகியோா் முன்னிலையில் கொடியேற்றம், திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா். செப். 18-ஆம் தேதி நவநாள் திருப்பலி, 19-ஆம் தேதி காலை கூட்டுத்திருப்பலி, இரவு தோ்பவனியும் நடைபெற உள்ளன. இதைத்தொடா்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.