பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
கோயிலில் அகற்றப்பட்ட கல்வெட்டுகளை மீண்டும் வைக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா மற்றும் முன்னாள் அறங்காவல் நிா்வாகத்தினா் புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொருத்தியதற்கான பழைய கல்வெட்டு, கோயில் அலுவலகம் திறந்த கல்வெட்டு உள்ளிட்ட கோயில் பகுதியில் இருந்த பழைய அறங்காவல் நிா்வாகத்தின் கல்வெட்டுகள், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக தற்போதைய நிா்வாகத்தால் அகற்றப்பட்டுவிட்டது. இதனை மீண்டும் அதே இடத்தில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.