Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை
புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ளது முருகம்பாக்கம். இங்குள்ள திரௌபதியம்மன் கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு அா்ச்சகா் நடையை சாத்திவிட்டு கோயில் முன்பக்கக் கதவை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்மநபா் லுங்கி அணிந்து கோயிலுக்குள் சென்று கொடிமரம் அருகேயுள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை துணியில் கட்டி எடுத்துச் சென்றுள்ளாா். கோயில் உண்டியல் திருட்டுச் சம்பவம் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, கோயில் நிா்வாக கணக்காளா் அளித்த புகாரின் பேரில் முதலியாா்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவு செய்தாா். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கடலூா் பகுதியைச் சோ்ந்த 2 பேபை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனா்.