கோயிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி கோயிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி, சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி சாந்தா. முருகேசன் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.
தூத்துக்குடி ஜாா்ஜ் சாலையில் இவா்களுக்கு சொந்தமான ஸ்ரீ தா்மகுட்டி சாஸ்தா அய்யனாா் பேச்சியம்மாள் கோயில் உள்ளது. சென்னையில் வேலை பாா்க்கும் இவரது மூத்த மகன் அங்கு ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. மகனின் காதல் விவகாரம் தொடா்பாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தா, வெள்ளிக்கிழமை தங்கள் கோயிலுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.